போர்த்திக்
கொண்டிருப்பவரே
ஆலங்கள்
அனைத்தையும்
அன்பினால்
போர்த்திக்
கொண்டிருப்பவரே...
ஒவ்வொரு
பொருளையும்
கருணைப்
போர்வை கொண்டு
போர்த்திக்
கொண்டிருப்பவரே...
ரௌளா
ஷரீபுக்குள்
மறைந்த
திருவுடலை
மண்ணால்
போர்த்திக்
கொண்டிருப்பவரே...
அஹ்லுல்
பைத்துக்களை
அணைத்துப்
பாசத்தால்
போர்த்திக்
கொண்டிருப்பவரே...
கலிமா
மொழிந்தோரை
கல்பாலே
போர்த்திக்
கொண்டிருப்பவரே...
கண்மணியே
எந்தன்
கல்பு
குளிர உரைத்தேன்
சோபனங்கள்...
௦௦
No comments:
Post a Comment