Saturday, February 26, 2022

திருச் சுட்டுவிரல்

 

 திருச் சுட்டுவிரல்

 ➖➖➖➖➖➖

 

 

வட்ட நிலவை

வெட்டிப் பிளந்த ..அந்தச்

சுட்டு விரலை

 

 

தோழருக்குப்

பட்ட விஷத்துக்குத்

தன் உமிழ்நீரைத்

தொட்டு வைத்த..அந்தச்

சுட்டு விரலை

 

 

தகித்த பாலையில்

தாகித்து தவித்த

தம் படையினருக்கு

நீர் பெருகிடச் செய்த

அந்தச் சுட்டு விரலை

 

 

காதலரசி கதீஜாவின்

கண்ணீர் துடைத்த அந்த

சுட்டு விரலை

கண்மணிகள் ஹஸன் ஹுசைன்

கைப்பிடித்து நடந்த அந்தச்

சுட்டு விரலை

 

சிறிது

தொட்டு முத்தமிடத்

துடிக்கிறேன்

என்னருமை நாயகமே....

00

No comments:

Post a Comment

Book cover