கண்ணின் மணியே
காத்தமுன் நபியே
மண்ணின் ரட்சகரே
மாண்புறு முத்தே
தண்ணின் நிலவே
தகவுறு பெருந்தகையே
முன்னின் திருவே
முதற் படைப்பே
என்னின் காதலரே
ஏந்தல் எம் பெருமானே
0
சொர்க்கத்தின் சோபிதமே
சுந்தரத் திருவுருவே
வர்க்கத்தில் குறைஷியரே
வம்சத்தில் ஹாஷிமே
மக்கத்தின் மாணிக்கமே
மதினத்தின் பேரெழிலே
நுக்கத்தின் அதிநுட்பமே
நபிகள் எங்கள் நாயகமே...
தக்கத்துணை தாங்களே
தங்கமே தாஹா ரஸூலே.
0
ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹி வசல்லிம்...
No comments:
Post a Comment