கடைசியில் நிற்கிறேன் கண்மணியே ரஸூலே
_______________________________________________
தாங்கொணாப் பாவச்சுமையுடன்
தாகித்து நிற்கிறேன் தடாகம் அருகில்,
தங்கமே
தங்கள் திருக்கரத்தால் ஒரு
கொடும்பாவி
கொடுவெய்யிலில்
கூனிக் குறுகி நிற்கிறேன்
கோமானே, தங்கள்
கொடிநிழல்
தேடி வந்தேன்...
செருக்கழிந்து உருக்குலைந்து
சாந்தி நபியே தங்கள்
சந்நிதிக்கு வந்தேன்
ஷபாஅத் தை
நாடி...
யா..உம்மத்தி...என
அழைக்கும் ஒரு
கருணை மொழி கேட்கத்தான
கடைசியில் நிற்கிறேன்
கண்மணியே ரஸூலே...
0
No comments:
Post a Comment